கோவை அருகே 150 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே 150 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளை கேரளாவுக்குக் கடத்திச் செல்லமுயன்றபோது மாவட்ட வன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-சின்னாறு சாலையில் வன அதிகாரிகள், அவ்வழியாகச் செல்லும்வாகனங்களை வழக்கம்போல சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. வன அதிகாரிகள் அதை நிற்குமாறு சைைகை காட்டியும்அது, நிற்காமல் வந்த வேகத்திலேயே பறந்தது.
உடனே வன அதிகாரிகள் அந்தக் காரை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி, மடக்கினர். ஆனால் அதிலிருந்த ஆறுபேர் காரிலிருந்து இறங்கி தப்பியோடி விட்டனர்.
பின்னர் அந்தக் காரை சோதனையிட்டபோது, அதில் 150 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றைக் கைப்பற்றிய வன அதிகாரிகள், அந்தக் காரையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications