காங்கிரசில் இணைய வாழப்பாடி ராமமூர்த்தி முடிவு
சென்னை:
தன்னுடைய தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு, காங்கிரசுடன் இணைய அக்கட்சித் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி முடிவு செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்வாழப்பாடி ராமமூர்த்தி.
திமுக, அதிமுக என்று பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைஇக்கட்சியால் பெற முடியவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் மீண்டும் காங்கிரசில் சேரப் போகிறார் என்று செய்திகள்அடிபட்டன. காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தனர்.
சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று சோனியா காந்தியையும் சந்தித்து விட்டு வந்தார் வாழப்பாடி. சமீபத்தில்வாழப்பாடி வீட்டுக்கு திடீர் விசிட் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரை மீண்டும்காங்கிரசில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்நடந்தது. காங்கிரசில் மீண்டும் ஐக்கியமாவது குறித்து அப்போது அவர் உறுப்பினர்களுடன் விவாதித்தார்.கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் காங்கிரசில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து வாழப்பாடி பேசினார். அவர்களுடன் பேசியபிறகு தமிழக ராஜீவ் காங்கிரசை தாய்க்கட்சியான காங்கிரசில் இணைக்க முடிவு செய்துவிட்டார் வாழப்பாடி.
அடுத்த டிசம்பர் மாத இறுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வரும் சோனியா காந்திமுன்னிலையில் காங்கிரஸ்-தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு விழா நடைபெறும் என்றும் வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications