அய்யப்ப பக்தர்களுக்கு போலீஸ் அறிவுரைவர் கைது
சென்னை:
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தமிழக மற்றும் கேரள மாநிலபோலீஸார் எச்சரிக்கை கலந்த அறிவுரை விடுத்துள்ளனர்.
சபரிமலை அய்யப்ப சீசன் துவங்கி விட்டது. பக்தர்கள் மாலை போட்டு விரதத்தைத் துவக்கியுள்ளனர். எனவேசபரிமலைக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடர்கள், சமூக விரோதிகள் கைவரிசையைக் காட்டலாம் என்றுபக்தர்களை போலீஸார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில போலீஸார் தனித்தனியாகவிடுத்துள்ள எச்சரிக்கை வருமாறு:
போலீஸார் தருகிற கார் பார்க்கிங் பாஸைப் பெற்றுக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே கார்கள்மற்றும் பிற வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால்கார்களில் திருட்டு ஏற்பட்டால் போலீஸார் பொறுப்பல்ல.
குழுவாக வருபவர்கள் தங்களது குழுவில் இடம் பெற்றுள்ள அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா என்பதைஅடிக்கடி பார்த்துக் கொள்ளவும். அவர்கள் வைத்துள்ள இருமுடிகள் மற்றும் பிற பொருட்களை கவனத்துடன்வைத்திருக்கவும்.
குழுவுக்குத் தலைமை தாங்கி வரும் குருசாமியிடம் பணத்தை மொத்தமாக கொடுத்து வைத்து அவர் மூலம்செலவழிப்பது நல்லது.
குழந்தைகளை அழைத்து வருபவர்கள் அவர்களை தனியாக விட வேண்டாம். கூடவே கூட்டிக் கொண்டுசெல்லவும்.
மலையில் ஏறும்போது இருமுடி மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே உடன் எடுத்து வரவும்.நகைகள், பணம் போன்றவற்றை எடுத்து வர வேண்டாம்.
அய்யப்ப பக்தர்கள் வேடத்திலேயே திருடர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்கள் வரக் கூடும் என்பதால் இரவுநேரங்களிலும், மாலையிலும், அதிகாலையிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மாலை அணிந்து சபரிமலைக்கு வருபவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
புகார்கள் ஏதாவது இருந்தால் பம்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும்.
தங்கும் இடங்களிலெல்லாம் சமையல் செய்தால் தீவிபத்து போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அடிக்கடிசமையல் செய்வதைத் தவிர்க்கவும் என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications