இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்ப திமுக கோரிக்கை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அவர்கள் உடனே தென்ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்று திமுக எம்.பியான சி.பி. திருநாவுக்கரசுஇன்று (வியாழக்கிழமை) ராஜ்ய சபாவில் கூறினார்.
கிரிக்கெட் நடுவர் மைக் டென்னசின் இந்தத் தண்டனைகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டவரான மைக் டென்னஸ் வேண்டுமென்றே கறுப்பின மக்களுக்கு எதிராகச்செயல்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இவ்வாறு செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது உண்மையானால், அந்த நடுவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியினர் தென்ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்று திருநாவுக்கரசுகூறியுள்ளார்.
நடுவர் மைக் டென்னஸ் அவருடைய முடிவை மாற்றிக் கொண்டாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்துஅவர் நீக்கப்பட்டாலும் மட்டுமே இந்திய அணி அங்கு தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மைக் டென்னசின் இந்த முடிவு எதிர்பாராதது, துரதிருஷ்டவசமானது என்று கூறிய திருநாவுக்கரசு, இதனால்கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
திமுக தலைவரான கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதும், இந்தியா விளையாடும் அனைத்துக் கிரிக்கெட்போட்டிகளையும் பெரும்பாலும் தவறாமல் பார்த்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோகாந்திரிக் காங்கிரசும் கண்டனம்:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து லோகாந்திரிக் காங்கிரஸ் கட்சியும் ராஜ்யசபாவில் கண்டனம் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட நடுவர் மைக் டென்னசை 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியகிரிக்கெட் அணியினர் நாடு திரும்ப வேண்டும் என்றும் இதற்காக மத்திய அரசு இந்திய கிரிக்கெட் போர்டுக்குஆதரவு கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி எம்.பியான ராஜீவ் சுக்லா வேண்டுகோள் விடுத்தார்.
இவர் இந்திய கிரிக்கெட் போர்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மைக் டென்னஸ் உருவ பொம்மை எரிப்பு:
இதற்கிடையே நாடு முழுவதும் கிரிக்கெட் நடுவர் மைக் டென்னசுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவினர் மைக் டென்னசின் உருவ பொம்மையைக் கொளுத்தினர். மைக்டென்னசுக்கு எதிராகவும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இந்திய அணியினரிடம் மைக் டென்னஸ் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications