மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பமாகும்-வி.எச்.பி.
சென்னை:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்போவதாகவும் அதற்கு அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா கூறினார்.
சென்னை வந்துள்ள தொகாடியா இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது வரும் டிசம்பர் மாதமத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு அனைத்துக் கட்சிஎம்.பிக்களின் ஆதரவைத் திரட்டி வருவதாகவும்கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பாரதிய ஜனதா கட்சி உட்பட எந்த அரசியல் கட்சியும் இதுவரைஎங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அடுத்த மாதம் மத்தியில் கோயில் கட்ட ஆதரவு அளிக்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுப்போம்.அதற்கு அவர்கள் ஆதரவளித்தால் அவர்களுக்குத் தான் லாபம். இல்லையென்றால் அவர்களுக்குத் தான் பெரும்நஷ்டம் ஏற்படும்.
பாரதிய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை, ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருப்பதாக அந்தக் கட்சியின்தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன. எனவே அந்தக் கட்சி மீண்டும் தனதுநிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளின் விருப்பம் எப்படியிருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் ஆச்சார்யார்களின்அறிவுரைப்படி வரும் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி வாக்கில் கட்டிடப் பணியை ஆரம்பிக்கிஇருக்கிறோம். அதற்கு முன்பாக சர்ச்சைக்குரிய அந்த இடத்தை எங்கள் வசம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும்.
நாங்கள் ராமர் கோயிலுக்குள் நுழைந்து வணங்கிவிட்டு வந்ததை அத்துமீறல் என்று உள்துறை அமைச்சர் அத்வானிகூறியிருக்கிறார். அது அத்துமீறல் இல்லை, ஒவ்வொரு இந்துவுக்கும் உள்ள உரிமை.
இதுகுறித்த வழக்கு இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நீதிகிடைக்கத் தாமதமாகிறது என்றால் நீதிமறுக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம். நாங்கள் 50 ஆண்டு காலம் பொறுத்து விட்டோம். இன்னும் 400ஆண்டுகளுக்கு நாங்கள் பொறுத்திருக்க வேண்டுமா என்ன?
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்வதற்காக நாங்கள் ராமர் கோயில் கட்டியேதீருவோம். இவ்வாறு பிரவீன் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications