7 பஸ் ஊழியர் சங்கங்கள் ஸ்டிரைக்கிலிருந்து வாபஸ்
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டக் குழுவில் இருந்து 7 தொழிற்சங்கங்கள் விலகுவதாகஅறிவித்துள்ளதையடுத்து நாளை நடைபெறுவதாக உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அவை பங்கேற்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் பிரச்சனையில் சி.ஐ.டி.யு. செயலாளர் செளந்திரராஜன் தலைமையில் அதிமுகவின் அண்ணா தொழிலாளர்சங்கம் தவிர மற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்தச் சங்கங்கள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்வதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார்நாகேந்திரன் மற்றும் அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் மலைச்சாமி எம்.பி. ஆகியோர் தலைமையில் பலதொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் விளைவாக த.மா.கா., ஹெச்.எம்.எஸ்., திராவிடர் கழகம், ஐ.என்.டி.யு.சி., புதிய நீதிக்கட்சி மற்றும் அண்ணாதொழிலாளர் சங்கம் உள்பட ஏழு சங்கங்கள் அரசுக்கு ஆதரவாகப் போராட்டக் குழுவில் இருந்து விலகுவதாகஅறிவித்துள்ளன.
இந்தச் சங்கங்கள் நாளை நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாது என்றும், தங்கள்குழவின் தலைவராக அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் மலைச்சாமியை ஏற்றுக் கொள்வதாகவும்அறிவித்துள்ளன.
அரசின் நிதிநிலைமையைக்ப புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறும், போக்குவரத்துப் பிரச்சனைகள்தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார்என்று இந்த ஏழு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications