எங்களுக்கு ஒன்னுமே தெரியாது: மாறன், பாலு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அடித்து இழுத்துச் சென்று கைது செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 போலீஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப் பதவிக்கு மாற்ற எங்கள் செல்வாக்கு எதையும் பயன்படுத்தவில்லை எனஅமைச்சர் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் கூறியுள்ளனர்.
மாநகர கவல்துறை கமிஷ்னர் முத்துக் கருப்பன், இணை கமிஷ்னர் ஜார்ஜ், துணை கமிஷ்னர் கிருஸ்டோபர் நெல்சன்ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு விடுத்த கோரிக்கையை மாநில அரசுகண்டுகொள்ளவில்லை.
தங்கள் மாற்றும் திட்டத்தை எதிர்த்து இந்த அதிகாரிகள் மத்திய தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்,மத்திய அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை இடம் மாற்ற முயல்வாதக் கூறியிருந்தனர்.
இந்த விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மாறனுக்கும் பாலுவுக்கும் தீர்ப்பாயம் நோட்டீஸ்அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து மாறனும் பாலுவும் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் எங்கள்செல்வாக்கு எதையும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக பத்திரிக்கைகளில் தான் செய்தி வந்தது.பத்திரிக்கைகளில் பார்த்துத் தான் விபரம் அறிந்தோம்.
அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் தவறானவை, வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் எஙகளை இழுக்கின்றனர்.இது பழிவாங்கும் நடவடிக்கை. எனவே, இந்த வழக்கிலிருந்து எங்கள் பெயரை நீக்க வேண்டும்.
இவ்வாறு இருவரும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.
மத்திய அரசு மீண்டும் கடிதம்:
இந் நிலையில் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியுமா முடியாதா எனக் கேட்டு தமிழகஅரசுக்கு மத்திய அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதம் கடந்த 23ம் தேதியே மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய நிர்வாகத் தீர்பாயத்தில்மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications