சரவண பவன் ராஜகோபாலுக்கு முக்கிய கட்சித் தலைவர் அடைக்கலம்
சென்னை:
கல்யாணமான பெண்ணை மிரட்டி தனக்கு மூன்றாம் தாரமாக்க முயன்ற ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தொடர்ந்துதலைமறைவாகவே உள்ளார். அவருக்கு முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் அடைக்கலம் கொடுத்திருப்பதாககூறப்படுகிறது.
சென்னையில் பிரபல ஹோட்டலான சரவண பவன் அதிபர் ராஜகோபால். சென்னையில் கே.கே.நகரில் சாதாரண அளவில் ஹோட்டலைஆரம்பித்த இவர் குறுகிய காலத்தில் வெகு வேகமாக வளர்ந்தார்.
நகரின் முதன்மையான ஹோட்டல் என்ற பெயரைப் பெற்ற சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் மறுபக்கம் சில நாட்களுக்கு முன் வெட்டவெளிச்சமானது.
ஏற்கனவே திருமணமான அவர், தன் ஹோட்டலில் முருக்கு சுட வேலைக்கு வந்தவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலையில் தனது ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வந்த ராமசாமி என்பவரின் மகள் ஜீவஜோதியையும் திருமணம் செய்யநினைத்தார் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் காமம் கண்ணை மறைக்க கண்மூடித்தனமாகஜீவஜோதியை மிரட்டினார் ராஜகோபால். அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்து அடித்து இழுத்துச் சென்றார்.
இன்றுவரை சாந்தகுமாரைக் காணவில்லை.
இதைத் தொடர்ந்து வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஜீவஜோதி புகார் கொடுத்தார். இந்தப் புகார் தமிழகத்தையே கலங்கடித்துள்ளது.இவரா இப்படி என்று பொது மக்களும், ஐயாவா இப்படி என அவரது கடைக்காரர்களும் திகைத்துப் போய் உள்ளனர்.
புகாருக்குப் பிறகு ராஜகோபால் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.
இந் நிலையில் ராஜகோபால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு விசாரணையில் உள்ளது. தற்போது தமிழகத்தின் முக்கியஎதிர்க்கட்சி புள்ளி ஒருவரின் பாதுகாப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்ராஜகோபால்.
அந்தத் தலைவரின் துணைவியரில் ஒருவர், சரவண பவன் ஹோட்டலில் ஒரு பார்ட்னராம். அவரும், ராஜகோபாலும் சேர்ந்துதான் ஆயிரம்விளக்குப் பகுதியில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளார்களாம். எனவே அம்மையாரும் அதிர்ச்சியில் உள்ளாராம்.
ஜீவஜோதி விவகாரம் வெடித்தவுடன் தலைவருடன் தொடர்பு கொண்டுள்ளாராம் ராஜகோபால். அப்போது அவர், போலீஸாரிடம்சிக்காமல் இருப்பதுதான் முதல் வேலை. எனவே போலீஸார் பிடியில் சிக்காமல் இருந்து கொள்ளுங்கள் என்று அட்வைஸ்கொடுத்துள்ளாராம் தலைவர்.
இதையடுத்து கட்சிப் புள்ளி (அவரது வீடு சென்னையில்தான் இருக்கிறது) ஒருவரின் வீட்டில் பத்திரமாக உள்ளாராம் ராஜகோபால்.
போலீஸாருக்கும் இது குறித்துத் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்தப் பிரச்சினையில் வேண்டும் என்றே தங்களது கட்சியைஇழுக்கிறார்கள் என்று அவர்கள் பிரசாரம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்களாம்.
மேலிட அனுமதிக்காக காத்துள்ளனர். கிடைத்தவுடன் ரெய்டுதானாம்.
அடங்கிய மேனேஜர்கள்:
இதற்கிடையே, சரவண பவன் ஹோட்டல்களில் வியாபாரம் படு பயங்கரமாக வீழ்ச்சியடைந்துள்ளதாம். அதிபர் தலைமறைவாகி விட்டதால்இதுவரை அவரிடம் அடிமைகள் போல வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனராம்.
ராஜகோபாலனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மேனேஜர்கள் ஆடிய ஆட்டமும் இப்போது நின்று விட்டதாம். தொழிலாளர்கள் இப்போதுஇந்த சபாரி டிரஸ் புகழ் மேனேஜர்களைக் கண்டு கொள்வது இல்லையாம்.
இந்த ஆண்டு தீபாவளி போனஸ் பணத்தை கொடுக்க வேண்டாம் என்று ராஜகோபாலுக்கு மேனேஜர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.இதையடுத்து அவரும் போனஸ் கொடுக்கவில்லையாம்.
ஆனால் ராஜகோபாலின் மனைவி தலையிட்டு உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்குமாறு உத்தரவிடவேதொழிலாளர்களுக்கு போனஸ் கிடைத்ததாம்.
எப்போதும் கூட்டமாக இருக்கும் வட பழனி சரவண பவன் ஹோட்டலில் ஓரளவே கூட்டம் வருகிறது. ஊழியர்கள் அனைவரும்இறுக்கமான முகத்துடன் காணப்படுகின்றனர்.
இனிமேலாவது இந்த ஹோட்டலுக்கு விடிவு காலம் ஏற்படட்டும் சார், அண்ணாச்சி கையில் இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள்எல்லாம் மொத்தமாக தற்கொலைதான் செய்ய வேண்டும். அந்தளவுக்கு நாங்கள் அடிமைகள் போல இருக்கிறோம். உடனடியாக ஹோட்டல்நிர்வாகத்தை அம்மா (ராஜகோபாலனின் முதல் மனைவி) எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications