நோயாளி வயிற்றுக்குள் கத்திரி: டாக்டர், நர்ஸ் இடைநீக்கம்
திருநெல்வேலி:
அறுவைச் சிகிச்சைக்கு வந்த நோயாளியின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்துத் தைத்த டாக்டரையும்அவருக்கு உதவிய நர்ஸையும் தமிழக அரசு இடை நீக்கம் செய்துள்ளது.
இன்னொரு மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ரூ. 15,000 உதவித் தொகை வழங்க முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளை ஹைகிரவுண்டு மருத்துவமனைக்குக் கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலிடவுனைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் சிகிச்சைக்காக வந்தார். வயிற்றில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம்அகற்றுவதற்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர் கே.எஸ். ராமலிங்கம் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தது. அவருக்கு நர்ஸ்பிரபாதேவி அன்பரசு உதவினார்.
அதே போல இந்த அறுவை சிகிச்சையின்போது உடனிருந்த டாக்டர் கே.ஜெகன்நாதன் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் ஞாபக மறதியால் தனது கத்திரிக்கோலை வயிற்றுக்குள்ளேயே வைத்துத்தைத்துவிட்டார்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த தங்கராசுக்கு மீண்டும் வயிற்று வலி ஆரம்பித்தது. நான்கு மாதங்களாகியும் வயிற்றுவலி தீரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வயிற்றில் மறைந்திருந்த கத்திக்கோல் வயிற்றைக்கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.
உடனே அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாளை மருத்துவமனை டீன் கண்ணன் கூறுகையில், தவறான அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்தற்போது தூத்துக்குடியில் உள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அரசுதான்முடிவுசெய்ய வேண்டும் என்றார்.
இந்த அறுவை சிகிச்சையை செய்யும்போது ராமலிங்கம் பாளை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகஇருந்தார். இப்போது பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பேராசியராக உள்ளார்.
அமைச்சர் உத்தரவு:
இந் நிலையில் டாக்டர் ராமலிங்கத்தையும், நர்ஸ் பிரபாதேவியையும் உடனடியாக இடை நீக்கம் செய்ய மாநிலநலத்துறை அமைச்சர் செம்மலை உத்தரவிட்டார்.
இன்று சேலத்தில் நிருபர்களிடம் இத் தகவலைத் தெரிவித்த செம்மலை, அந்த டாக்டர் இண்டியன் மெடிக்கல்கவுன்சிலில் பதிவு பெற்றவர். அதிலிருந்தும் அவரை நீக்க கவுன்சிலுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த இடை நீக்கம் மற்ற டாக்டர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். நோயினால் உயிர் போகலாம்.ஆனால், டாக்டரின் அலட்சியத்தால் உயிர் போவதை ஏற்க முடியாது என்றார்.
நோயாளி தேறுகிறார்:
இதற்கிடையே நேற்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கத்தரிக்கோல் நீக்கப்பட்ட தங்கராஜ் உடல் நிலைதேறி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications