தேனி அருகே ரூ.2 கோடி கஞ்சா பயிர்கள் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி வருசநாடு அருகே மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாப் பயிர்களை போலீசார்தீ வைத்து அழித்தனர்.
தேனி மாவட்டம் வருசநாட்டு மலைக் கிராமம் கோயில் பாறையில் சட்டவிரோதமாகக் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஒரு ஒரு தனிப் போலீஸ் படை அந்தப் பகுதிக்குச் சென்று அங்கு மலைச் சரிவுகளில்பயிரிடப்பட்டிருந்த கஞ்சாப் பயிர்களை தீயிட்டு அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சாப் பயிர்களின் மதிப்பு ரூ.2 கோடிஎன்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
போலீசார் வருவது குறித்துத் தகவல் அறிந்ததும், கஞ்சாப் பயிரிட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
வழக்குப் பதிவுசெய்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications