தமிழக அரசின் பிடிவாதத்துக்கு வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த 16 நாட்களாக தங்கள் பிடிவாதத்தைக் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காத போக்குவரத்துக் கழகஊழியர்கள், கடைசியில் அரசின் பிடிவாதத்துக்கே கட்டுப்பட்டு விட்டனர்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 9ம் தேதிமுதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தைக் கைவிடுமாறு அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு சார்பில்,போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர்தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆனாலும் மாறி மாறி பேச்சுவார்த்தைகள் நடந்ததுதான் மிச்சம். தமிழக அரசு தரப்பில் 8.33 சதவீதம் தான்போனசாகத் தரமுடியும் என்று கூறிவிட்டது. போக்குவரத்து ஊழியர்களும் தங்கள் நிலையில் பிடிவாதமாகஇருந்தனர்.

இரதரப்பினரும் தங்கள் கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருந்ததால் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமூக முடிவுஎட்டப்படவில்லை.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.சி.டி.யு உள்ளிட்டதொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால் பொது வேலை நிறுத்தம் வெற்றியடையவில்லை. ஆனாலும் இது வெற்றி பெற்றதாகக் கூறி போக்குவரத்துஊழியர் சங்கங்கள் தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டனர்.

இதற்கிடையே அண்ணா தொழிலாளர் சங்கம், த.மா.கா. உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் அரசுடன் தனியாகப்பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்து கொண்டனர்.

பொது வேலை நிறுத்தம் தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.

ஆனால், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதுதான் அந்த நடவடிக்கை என்பதுபெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததுதான். அதன்படியே நடந்தும்விட்டது.

நாளையே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள்.

இதேபோல 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தொழிலாளர்களும் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+