விரும்பியோ மகிழ்ச்சியுடனோ வாபஸ் பெறவில்லை - பஸ் ஊழியர் சங்கங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாங்கள் விரும்பியோ, மகிழ்ச்சியுடனோ இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றுஅனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சவுந்திரராஜன் கூறினார்.
இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறுகையில்:
பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் கடந்த 16 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளமுடிவு செய்துள்ளோம்.
மிகுந்த வருத்தத்தோடு, இதயத்தில் கசியும் ரத்த வேதனையுடன் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
தமிழக அரசு வீண் பழி வாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட அனைத்துத்தொழிலாளர்களையும் விடுதலை செய்து, நாளையே அவர்கள் பணிக்குத் திரும்ப வகை செய்ய வேண்டும் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications