கிருஷ்ணசாமி கைது... திருமாவளவன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளதாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேயிலைப் போராட்டத் தொழிலாளர்களுக்காக போராடிய கிருஷ்ணசாமியை அரசியல் உள்நோக்கத்துடன் கைதுசெய்துள்ளனர்.
இது அதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையும், பழிவாங்கும் அரசியலையும் பிரதிபலிக்கிறது. உடனேகிருஷ்ணசாமியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications