வயிற்றில் கத்திரியுடன் தைக்கப்பட்ட தங்கராஜ் சீரியஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்துத் தைக்கப்பட்டு பின்னர் ஆபரேஷன்மூலம் கத்திரிக்கோல் அகற்றப்பட்ட தங்கராஜின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர்சென்னை அரசு மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (58). இவர் வயிற்றில் கட்டி இருந்ததன் காரணமாக பாளையங்கோட்டைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆபரேஷனுக்குப் பிறகும் வயிற்று வலி குறையவில்லை. இந்த நிலையில் ஆபரேஷனுக்குப் பிறகு நான்கு மாதங்கள்கழித்து தங்கராஜின் வயிற்றிலிருந்து கத்திரிக்கோல் வெளிப்பட்டது.

அப்போதுதான், தவறுதலாக வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து டாக்டர் தைத்து விட்டது தெரிய வந்தது. இந்தசம்பவம் தமிழகத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியது. உடனடியாக தங்கராஜுக்கு மீண்டும் ஆபரேஷன் செய்யப்பட்டுகத்திரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டது.

கத்திரிக்கோல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு தங்கராஜின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. இப்படியே விட்டால்அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் அவர் சென்னையிலுள்ள ஒரு அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆனால் எந்த அரசு மருத்துவமனை என்பதை பாளையங்கோட்டை அரசுமருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+