சிட்டி பஸ்களில் கூடுதல் கட்டணம் தொடர்கிறது
சென்னை:
சென்னை நகர பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் பயணிகளுக்கும்,கண்டக்டர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடக்கிறது.
பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் முடிந்து சில நாட்கள் ஆகியும் கூட பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்குத்திரும்பாமல் உள்ளது. முழுமையான அளவில் பஸ்கள் இன்னும் ஓடத் தொடங்கவில்லை.
டிக்கெட் கட்டணமும் அதிக அளவிலேயே உள்ளது. இதனால் பயணிகள் பாதிப்பு தொடர்கதையாகி உள்ளது.
ஸ்டிரைக்கின்போது இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்களில் நிர்ணயக் கட்டணமாகரூ.3, ரூ.5, ரூ.7, ரூ.10 என வசூலிக்கப்பட்டது. ஸ்டிரைக் முடிந்த பின் இது முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள்எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்களது நினைப்பில் மண் விழுந்தது. இன்னும் பழைய கட்டணத்திற்கு அரசு பஸ்களின் கண்டக்டர்கள்மாறவில்லை. புதுக் கட்டணமே வசூலித்து வருகிறார்கள். இதனால் பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையேதினசரி மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
ஏன் இப்படி அதிக கட்டணத்தில் தொடர்ந்து டிக்கெட் கொடுக்கிறீர்கள், அமைச்சர் தான் பழைய டிக்கெட்கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று கூறி விட்டாரே என்ற பயணிகள் கேட்டால், எங்களது அதிகாரிகள்எங்களிடம் இந்த டிக்கெட்டுகளைத்தான் கொடுத்துள்ளார்கள். இவை காலியாகும் வரை இதையேவிநியோகியுங்கள் என்று அவர்கள் கூறும்போது நிாங்கள் என்ன செய்ய முடியும். முடிந்தால் வாங்குங்கள்,இல்லாவிட்டால் இறங்குங்கள் என்று கறாராக கூறி வருகிறார்கள்.
இதனால் ஆத்திரமடையும் பயணிகள் கண்டக்டர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர். இதனால் சென்னைமக்களுக்கு பஸ் பயணம் பெரும் வேதனையானதாக மாறியுள்ளது. அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications