இப்போதைக்கு கோபால் கைது இல்லை: தமிழக டி.ஜி.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்யும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று தமிழக போலீஸ்டி.ஜி.பியான பி.பி. நைல்வால் இன்று (புதன்கிழமை) கூறினார்.
அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
உண்மையான ஆதாரம் கிடைக்கும் வரை நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்.
யாரையாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடக போலீசார் சென்னைக்கு வந்திருந்தால் நிச்சயம்அவர்கள் தமிழக போலீசாரைத் தொடர்பு கொண்டிருப்பார்கள். ஆனால் அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை.
வீரப்பன் மற்றும் அவர் தொடர்பான வழக்குகள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றார் நைல்வால்.












Click it and Unblock the Notifications