1,800 இந்தியர்களுக்கு மலேசிய குடியுரிமை மறுப்பு
கோலாலம்பூர்:
கடந்த 10 ஆண்டுகளில் மலேசிய குடியுரிமை பெற விண்ணப்பம் செய்த 1,800 இந்தியர்களின் மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மலேசியாவில் உள்ள இந்தியர்களில் 4,409 பேர் மலேசியக் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்திருந்தார்கள்.இவர்கள் அனைவரும் குறைந்தது 8 வருடத்திற்குமேல் இங்கு வசித்து வருபவர்கள்.
இவர்களில் 1,813 பேருக்கு அவர்களின் நடத்தை, மலேய மொழியைக் கற்றுக் கொள்ளாமை மற்றும் மலேசியக்கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாமை ஆகிய காரணங்களுக்காக குடியுரிமை வழங்கவில்லை.
மேலும் பலர் அவர்களது சொந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது மற்றும் 2 நாடுகளின்குடியுரிமையை அனுபவிப்பது ஆகியவற்றால் அவர்களுடைய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
2.3 கோடி மக்கள் தொகை கொண்ட மலேசியாவில் 7 சதவீத மக்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 7,89, 120 வெளிநாட்டு பிரஜைகளுக்கு இங்கு தற்காலிக அடிப்படையில் வேலை பார்க்கஅனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், இந்தோனேசியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான்,தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலிருந்து குறைந்த சதவீதத்தினர்தான் இவ்வாறு அங்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications