கோபால் மீது பொடோ சட்டம் பாயுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பொடோ சட்டத்தின் கீழ் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலை கைதுசெய்ய கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கர்நாடக அதிரடிப்படை போலீஸார்சென்னை வந்துள்ளனர். அவர் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்றது தொடர்பாக காட்டுக்குள் சென்று விட்டுவந்தவர்களை ஒவ்வொருவராக கைது செய்து விசாரிக்க கர்நாடக அதிரடிப்படை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக நக்கீரன் பத்திரிக்கையின் சேலம் நிருபர் சிவசுப்ரமணியத்தை கர்நாடக அதிரடிப்படை போலீஸார்கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையின்போது பல்வேறு தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜ்குமாருடன் சேர்ந்து வீரப்பன் பிடியில் இருந்த நாகப்பா என்பவர் வீரப்பனைத் தாக்கி விட்டுத்தப்பியது எப்படி என்பது குறித்து போலீஸாரிடம் சிவசுப்பிரமணியம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதில் நக்கீரன் கோபால்தான் இந்தக் கடத்தலுக்கே காரணம் என்ற ரீதியில் கூறியிருந்தார். இதையடுத்துகோபாலைக் கைது செய்ய கர்நாடகம் முடிவு செய்தது.

கோபாலை பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. வீரப்பனையும்தீவிரவாதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் இருக்குமிடம் தெரிந்தும் அதைக் காட்டிக் கொடுக்ககோபால் மறுப்பதால் அவரை பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து புதன்கிழமைக்குள் கோபால் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தப் பணிக்காக கர்நாடகஅதிரடிப்படை போலீஸார் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர்.

கோபால் கைது செய்யப்பட்டால் அது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

தமிழகம் ஒப்புதல்:

கோபாலைக் கைது செய்ய தமிழக போலீஸ் தரப்பிலும் ஒத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகதமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய புள்ளியும் பச்சை கொடி காட்டி விட்டாராம்.

எப்படியும் வீரப்பனைப் பிடித்தே தீருவது என்ற உறுதியான முடிவில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் இருப்பதால்அடுத்தடுத்து சில முக்கிய கைது சம்பவங்கள் தொடரலாம்.

கோபால் கைது செய்யப்பட்டால் தமிழகத்தில் பத்திரிகை வட்டாரத்தில் என்ன மாதிரியான ரியாக்ஷன் இருக்கும்என்பது பற்றி ஆய்வு செய்ய தமிழக போலீஸ் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தலைவர் கருத்து:

இந் நிலையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,பொடோ சட்டத்தின் கீழ் பத்திரிக்கையாளர்கள் யாரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்றார்.

மேலும் பொடோ சட்டத்தை காங்கிரஸ் தலைவி சோனியா எதிர்த்து வருகிறார். சோனியாவின் தீவிர ஆதரவாளரானஎஸ்.எம்.கிருஷ்ணா தனது போலீசார் பொடோ சட்டத்தைப் பயன்படுத்துவதை அனுமதிப்பாரா என்றுதெரியவில்லை.

அப்படியே மாநில அரசு பொடோவைப் பயன்படுத்த முடிவெடுத்தாலும் பத்திரிக்கை ஆசிரியரை இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மத்திய அரசு அனுமதிக்குமா என்பதும் சந்தேகம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+