வழக்கம் போல் 30ம் தேதியே அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
சென்னை:
அரசு ஊழியர்களுக்குத் திட்டமிட்டபடி இம்மாத இறுதியிலேயே சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவதில் பெரும் சிக்கல்ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்கள், சிவில் சப்ளைஸ் ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள்ஆகியோருக்கு வெறும் 8.33 சதவீத போனஸே வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்து தற்போதுதான் ஓய்ந்துள்ளன.
இந்த நிலையில் அரசிடம் பண நெருக்கடி இருப்பதால் இந்த மாதத்திற்கான சம்பளம் வழக்கம் போல 1ம் தேதியேகிடைக்காது என்றும், ஒரு வாரத்திற்கும் மேல் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்பட்டது.
இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. சம்பளத்திற்கே திண்டாட்டம் என்றால் நமதுவேலையாவது நிலைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது.
அவர்களது பீதியை அதிகப்படுத்தும் வகையில், படிகளில் வெட்டு, சலுகைகளில் வெட்டு, ஆட்குறைப்பு, விருப்பஓய்வுத் திட்டம் என பல நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும்அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சரியான தேதியில் சம்பளம் வராவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது என பலஅரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்திருந்தன. இது அரசின் காதுக்கும் போயுள்ளது.
இதையடுத்து சில உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் அவர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபடும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது அரசு நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்து விடும்.
எனவே சம்பளத்தை சரியான தேதியில் கொடுத்து விடுவதே நல்லது என்று அரசு முடிவெடுத்துள்ளதாகத்தெரிகிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள நிதியை சம்பளம் கொடுக்க பயன்படுத்துமாறும் அறிவுரைகூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மாத சம்பளம் உரிய தேதியில் வழக்கம் போல வழங்கப்படும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications