புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக தமிழ்நாடு விடுதலைப்படைஅமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
"சிறையிலிருக்கும் விடுதலைப்படையினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சந்தன வீரப்பனைப் பிடிக்ககாட்டுக்குள் அனுப்பட்டுள்ள அதிரடிப்படியை உடனே வாபஸ் வாங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லைஎன்றால் புதுக்கோட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து விடுவோம்" என்று கூறி புதுக்கோட்டைரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தமிழ்நாடு விடுதலைப் படையினரிடம் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை)ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை அரியலூர் என்ற முகவரியுடன் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம், திருப்பூரிலிருந்துபோஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது,
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்னும் 75 நாட்களில் சக்திவாய்ந்த குண்டுகள் 10 இடங்களில் வெடிக்கும். மேலும்புதுக்கோட்டை ஸ்டேஷன் மாஸ்டரின் தலை துண்டிக்கப்படும்.
போலீஸ் விழிப்புடன் இருந்தாலும் இந்தச் சம்பவம் திட்டமிட்டபடி நடந்தே தீரும். எனவே உடனடியாக எங்கள்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த மர்மக் கடிதம் வந்ததையடுத்து ரயில்வே தண்டவாளங்களைக் கண்காணிக்க திருச்சியிலிருந்து டிராலிகள்வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.ஸ்டேஷன் மாஸ்டருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications