தீவிரவாதிகளைக் காப்பாற்றிய பாகிஸ்தான்
வாஷிங்டன்:
ஆபகானிஸ்தானில் குண்டூஸ் நகரில் சிக்கியிருந்த பாகிஸ்தானிய தீவிரவாதிகளை தனது ஹெலிகாப்டர்கள், சிறியவிமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் காப்பாற்றி அழைத்துச் சென்றிருக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தான் ரெகுலர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ராணுவத்திலிருந்து இது போன்ற பணிகளுக்குஅனுப்பப்பட்டவர்கள். இவர்கள் கார்கில் ஊடுருவலின்போது தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்தியாவுக்குள்நுழைந்தனர்.
அதேபோல நார்த்தர்ன் அலையன்ஸ் எதிர்த்துப் போராட ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவத்தினரும்ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து வந்தனர். இந் நிலையில் தான் அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பித்தது.
பல்வேறு நகர்களில் இருந்து பாகிஸ்தானிய வீரர்கள் திரும்பி வந்துவிட்டனர். ஆனால், குண்டூஸ் நகரில் இருந்துஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களால் திரும்ப முடியவில்லை. அவர்களை அல்-காய்தா தீவிரவாதிகள் தப்பிச்செல்ல விடவில்லை. தொடர்ந்து தங்களுடன் இருந்து போராடுமாறு கூறி வந்தனர்.
இந் நிலையில் அந்த நகரை நார்த்தர்ன் அலையன்ஸ் சுற்றி வளைத்தது. இதனால் அவர்கள் வசமாகசிக்கியிருந்தனர். இவர்கள் ஆப்கானிஸ்தானில் உயிர்விட்டால் உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்என்பதால் அவர்களைக் காப்பாற்றி அழைத்து வர பாகிஸ்தான் ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களில் குண்டூஸ்சென்றனர்.
நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்களை காப்பாற்றி அழைத்து வந்தனர்.
இதை இந்திய உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து ஏற்கனவே வெளியில் தகவல் வெளியிட்டன. ஆனால், இதைஅமெரிக்கா மறுத்து வந்தது. இப்போது பாகிஸ்தான் ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தான் சென்று வந்ததைபென்டகன் உறுதி செய்துள்ளது.
இந்தியா முக்கிய பங்காற்றும்: அமெரிக்கா
வரும் நாட்களில் ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என அமெரிக்காதெரிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பசிபிக் கடற்படைக் கமாண்டின் தலைவர் டென்னிஸ் பிளேர் கூறுகையில்,அல்-காய்தாவை ஒழித்துக் கட்டினால் மட்டும் தீவிரவாதம் ஒழிந்துவிடாது. தப்பிவிட்ட தீவிரவாதிகள், புதியதீவிரவாத அமைப்புகளால் இந்தப் பிரச்சனை தொடரும். அதை அவ்வப்போது நசுக்கிவிட வேண்டும்.
சர்வதேச விவகாரங்களில் இந்தியா இப்போது உள்ளதைவிட மிக தீவிரமாக பங்கு வகித்தால் தான் இப் பகுதியில்அமைதியை உகுவாக்க முடியும் என்றார்.
அடுத்த அரசு குறித்து தொடர்ந்து பேச்சு:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து தலிபான்கள் தவிர்த்த பல்வேறு தரப்புகளைச்சேர்ந்த படையினரும் ஜெர்மனியில் சந்தித்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.
பான் நகரில் இந்தப் பேச்சு நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவுக்கும் ஆட்சியில்பங்கு தர ஒப்புக் கொள்வதாக நார்த்தர்ன் அலையனஸ் படையினர் தெரிவித்தனர். ஆனால், அவருக்கு எந்தமாதிரியான பதவி வழங்குவது என்பது குறித்து ஏதும் சொல்ல முடியாது. ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள்கவுன்சில் (லோயா ஜிர்கா) என்ன முடிவெடுக்கிறதோ அதை ஏற்போம் என்றனர்.
அல்-காய்தா முக்கியத் தலைவர்கள் பலி:
அமெரிககத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து முக்கியமான 6 அல்-காய்தா தலைவர்கள் பலியாகிவிட்டதாகத்தெரியவந்துள்ளது என பென்டகன் கூறியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானின் தென் பகுதியிலும் மஷார்-ஏ-ஷெரீப் நகரிலும்தொடர்ந்து வந்திறங்கிய வண்ணம் உள்ளன. விமானப் படைத் தளங்களைப் பாதிகாக்கும் பணியில் இந்தப்படைகள் ஈடுபட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications