கல்பாக்கம் மேல் ஹெலிகாப்டர் பறக்கவில்லை: பெர்னாண்டஸ்
டெல்லி:
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அமெரிக்க ஹெலிகாப்டர் கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு மேலே பறக்கவில்லைஎன்று நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்துப் பேசியதாவது:
இந்திய வான் பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர் அத்துமீறிப் பறந்தது என்று இந்திய விமானப்படையிடமிருந்தோ, கடற்படையிடமிருந்தோ, விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்தோ எந்தவிதமான புகாரும் வரவில்லை.
மேலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மீதும் அமெரிக்க ஹெலிகாப்டர் பறக்கவில்லை என்று உறுதியாகக்கூறுகிறேன்.
மேலும் அமெரிக்கா உள்பட சில நட்பு நாடுகளின் கப்பல்கள் நம் நாட்டின் துறைமுகங்களில் வந்து நிற்பதற்குஉரிய அனுமதி இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சென்னை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காகஅமெரிக்கக் கப்பல் யு.எஸ்.எஸ். ஜான் யங் வந்துள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து 60 கி.மீ. தூரத்தில் இந்தக் கப்பல் நின்று கொண்டிருந்தபோதுதான், அதிலிருந்து ஒருஹெலிகாப்டர் வானில் பறந்துள்ளது.
ஆனால் இந்திய வான் வெளிக்கு அப்பால் சர்வதேச வான் வெளியில்தான் அந்த ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தது. இதை தங்கள் ராடாரில் கவனித்த இந்தியக் கடற்படையினர் உடனடியாக யு.எஸ்.எஸ். ஜான் யங்கப்பலுக்குத் தெரிவித்தனர்.
உடனடியாக ஹெலிகாப்டர் கப்பலிலேயே மீண்டும் இறங்கிவிட்டது. இதனால் அந்த ஹெலிகாப்டர் இந்திய வான்பகுதியில், முக்கியமாக சென்னை வான் பகுதியில் பறக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றார் பெர்னாண்டஸ்.
பெர்னாண்டஸ் இவ்வாறு விளக்கமளித்த போதிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவர் சொல்வதைஏற்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால் 10 நிமிடங்களிலேயே அவர்கள் மீண்டும்அவைக்குள் வந்துவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications