அமைச்சர்களின் சுகங்களுக்கு தடையில்லை!
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சீர்செய்வதாகக் கூறிக் கொண்டு பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம்,அரிசி விலை, பால் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள தமிழக அரசு,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சுகபோக வாழ்க்கைகக்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.
சாமான்ய மக்களைப் பாதிக்கும் பால் விலை, அரிசி விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் என்று அனைத்துவகைக் கட்டணங்களையும் தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ளது. நிதிநிலையைச் சீர்செய்வதற்காக இந்த விலைஉயர்வை அமல்படுத்தியுள்ளதாக அரசு விளக்கியுள்ளது.
ஆனால் அரசின் செலவில் பெரும் பங்கை வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் போக்குவரத்து,குடியிருப்பு, சுற்றுலா, விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் போன்ற வகைகளில் ஏற்படும் செலவைக் குறைக்க எந்தவிதநடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் 8 முதல் 10 கார்கள், ஜீப்புகள் அரசு செலவில் ஓடிக்கொண்டிருக்கின்றன.அதிகாரிகள் வீட்டிலும் இதே நிலை தான். இவை பெரும்பாலும் அவர்களின் குடும்ப வேலைகளுக்குப்பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் உண்மை.
இதேபோல அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், டி.ஆர்.ஓக்கள் உட்பட அனைத்து உயர்அதிகாரிகளுக்கும் பிரம்மாண்டமான பங்களாக்கள். அவற்றை பராமரிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கில்செலவுகள் என்று இந்த வகையில் அனாவசியச் செலவினங்களைக் குறைக்க அரசு எந்த முயற்சியும் எடுத்ததாகத்தெரியவில்லை.
மேலும், இவர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்குச் செல்வதற்காக, துறை சம்பந்தமான ஆய்வை நடத்தப்போகிறேன் என்று கூறிவிட்டு அரசு செலவில் குடும்பத்துடன் விமானத்திலோ, ஏ.சி. ரயிலிலோ செல்கிறார்கள்.குடும்பத்திற்கும் சேர்த்து செலவுகள் அரசு தலையில் தான் கட்டப்படுகின்றன.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது வெளிநாடுகள் சுற்றுப் பயணம் செல்கிறார்கள்.வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தங்கள் துறை சம்பந்தமாகப் பல நுண்ணிய கலைகளைக் கற்றுத் தேர்ந்துஅவற்றை இங்கு வந்து அமல்படுத்துவது இந்தப் பயணத்தின் நோக்கம். ஆனால் அவ்வாறு யாரும் செய்வதில்லை.அதை அவர்கள் இன்பச் சுற்றுலாப் போன்று எத்துக் கொண்டு விடுகிறார்கள்.
அரசின் வருமானத்தில் பெரும் பங்கை கரைக்கும் இது போன்ற வீண் செலவுகளைக் குறைக்க அரசு தக்க எடுக்கவேண்டும். அதை விடுத்து அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் சாமான்ய மக்களின் தலையில் கைவைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் அனைவரும் கொதித்துப் போயுள்ளனர்.
அதே போல சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கும் கேபினட் அமைச்சருக்குரியஅனைத்து சொகுசும் வழங்கப்படுகிறது.
அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டதால் உங்களுக்கு இந்தச் சிரமம். உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும்வேண்டும் என்ற தொனியில் திமுக தலைவர் கிண்டல் அறிக்கையும் மக்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது.எதற்கெல்லாமோ போராட்டம் நடத்தி ரயில் தண்டவாளத்தில் எல்லாம் தலை வைத்த கருணாநிதி மக்கள் மீதுஏற்றப்பட்டுள்ள இந்த சுமையைக் கண்டித்து போராட்டம் நடத்துவாரா என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications