ஆறுகள் பிரச்சனை: தமிழகத்துடன் பேச கேரளா முடிவு
திருவனந்தபுரம்:
பாண்டியாறு- புன்னபுழா ஆறுகள் தொடர்பான விவகாரம் குறித்து தமிழக அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தைநடத்தப்படும் என்று கேரள முதல்வர் ஏ.கே.அந்தோனி கூறினார்.
இன்று (வியாழக்கிழமை) கேரள சட்டமன்றத்தில் இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஆர்யதான் முகம்மது பேசியபோது, தமிழகத்தில் ஓடும் பாண்டியாறு ஆற்றிலிருந்து கேரளாவில் ஓடும் புன்னபுழா ஆற்றிற்கு நீர் தரப்பட்டுவந்தது. ஆனதால் தற்போது புன்னபுழா ஆறு வறண்டு போய் இருக்கிறது.
இரண்டு மாநிலங்களுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தை தமிழ் நாடு அரசு மீறி வருகிறது. இதற்கு கேரளாஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றுகேட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசுகையில், முதல்வர் அந்தோனி மேலும் கூறியதாவது,
பாண்டியாறு- புன்னபுழா ஆறுகள் தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைநடத்தப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக ஒத்துழைக்கவில்லை.
கடந்த 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் குறித்த விதிகளின் அடிப்படையில்இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து தமிழக அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications