இலங்கை: தமிழர் வசிக்கும் பகுதிகளில் இன்று பந்த்
கொழும்பு:
இலங்கையில் நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழர்கள்வசிக்கும் பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது.
இலங்கையில் வரும் டிசம்பர் 5ம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்போட்டியிடும் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று (புதன்கிழமை)பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதுஅவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு த-மி-ழர்-கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள -யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுபவர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)தான் என்று தமிழ் ஐக்கிய விடுதலைமுன்னணியினர்(டி.யு.எல்.எப்) குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் டி.யு.எல்.எப். வேட்பாளர் மா-வை சேனாதிராஜா படுகாயம் அடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்-கி-டை-யில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் தாக்குதலுக்குக் கடும்கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் தீவிரவாதியும், தற்போதைய வடக்குப் பகுதியின் வளர்ச்சிமற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
நேற்று தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எங்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.மேலும் அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
மக்கள் அனைவரும் எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைத்தூண்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.
இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிகளாகிய யாழ்ப்பாணம், வவுனியா, பாடிகோலா,திரிகோணமலை ஆகிய இடங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள்எதுவும் ஓடவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
டி.யு.எல்.எப். உள்ளிட்ட 4 முக்கியத் தமிழர் கட்சிகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications