போலீஸ் காவலில் சரவண பவன் ராஜகோபால்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலை சென்னை வேளச்சேரி போலீஸாரிடம் விசாரணைக்காகஒப்படைக்க சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
திருமணமான பெண்ணை மிரட்டியும், அவரது கணவரை கடத்தியும் அப்பெண்ணை திருமணம் செய்யவற்புறுத்தியதாக ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜகோபால், காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரைவிசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வேளச்சேரிபோலீஸார் மனு செய்தனர்.
மனு இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மனுவை விசாரித்த நீதிபதி,போலீஸ் காவலுக்குப் போவதில் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா என்று ராஜகோபாலிடம் கேட்டார்.
அதற்கு அவர் அழுதவாறே, எனக்கு உடல் நிலை சரியில்லை. எனவே ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில்வைத்திருக்க அனுமதியுங்கள். போலீஸாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்றார்.
அதை நிராகரித்த நீதிபதி, ஐந்து நாள் போலீஸ் விசாரணைக்கு ராஜகோபாலை அழைத்துச் செல்லலாம். அவரிடம்விசாரணை நடக்கும்போது ராஜகோபாலின் வக்கீல் உடனிருக்கலாம். ஆனால் விசாரணையின்போது குறுக்கீடுசெய்யக் கூடாது. டிசம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்குள் கோர்ட்டில் மீண்டும் ராஜகோபால் ஆஜர் படுத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜகோபால் போலீஸ் காவலின் கீழ் வந்துள்ளார். அவரிடம் ஜீவஜோதி விவகாரம் தொடர்பாகபோலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்வர் என்று தெரிகிறது.
ராஜகோபாலுடன் அவரது மேனேஜர் சேதுவும் போலீஸ் காவலின் கீழ் வந்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications