தமிழுக்காக ஒன்று சேர்ந்த திமுக, அதிமுக
டெல்லி:
வழக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் கூட பார்த்துக் கொள்ளாத அதிமுக, திமுக எம்.பிக்கள் ராஜ்யசபாவில்தமிழுக்காக ஒன்றாக சேர்ந்தனர்.
அதிமுக எம்.பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் நேற்று ஊட்டி ஹோமியோபதி கல்லூரி தொடர்பாககவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தமிழில் பேசினார். எஸ்.எஸ். தமிழில் பேசுவதற்கு துணை ஜனாதிபதியும்ராஜ்யசபை தலைவருமான கிருஷ்ணகாந்த் ஆட்சேபம் தெரிவித்தார்.
கவனஈர்ப்புத் தீர்மானத்தை ஆங்கிலத்தில் தந்துள்ள சந்திரன் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சந்திரன், நான் ஏற்கனவே இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் ஆங்கில மொழியாகத்தைராஜ்யசபை செயலாளரிடம் கொடுத்துவிட்டேன். இதனால் நான் பேசுவதை மொழி பெயர்த்துத் தர வேண்டியதுஅவரது கடமை. எனவே, நான் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த திமுக எம்.பியும் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன், அவரை தமிழில் பேச அனுமதிக்கவேண்டும் என்றார். உடனே பிற திமுக எம்.பிக்களும் எழுந்து எஸ்.எஸ். சந்திரனை தமிழில் பேச அனுமதிக்கக்கோரினர்.
எஸ்.எஸ்.சந்திரன் சார்ந்துள்ள அதிமுகவின் எம்.பிக்களும் தமிழில் பேச அனுமதி வழங்க வேண்டும் என்றுவற்புறுத்தினர்.
அப்போது எழுந்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பியும் மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபாலும் சந்திரனைதமிழில் பேச அனுமதிக்கலாம் என்றார்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பியான அலுவாலியாவும் தமிழுக்கு ஆதரவாகப் பேசினார்.
இதையடுத்து எஸ்.எஸ். சந்திரனை தமிழில் பேச கிருஷ்ணகாந்த் அனுமதித்தார்.
பின்னர் பேசிய சந்திரன் தனக்கும் தமிழுக்கும் ஆதரவாகப் பேசிய திமுக, பா.ஜ.க. எம்பிக்களுக்கும்அலுவாலியாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications