மோட்டார் வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு
சென்னை:
தமிழகத்தில் நிதிநெருக்கடியைச் சமாளிக்க அரசு அறிவித்துள்ள விலை உயர்வின் தொடர்ச்சியாக மோட்டார்வாகனங்களுக்கான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
ஆம்னி பஸ்சுக்கான(36 சீட்கள்) காலாண்டு வரி ரூ.2,000 லிருந்து ரூ.3,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார்பணிகளுக்கப் பயன்படுத்தப்படும் பஸ்சுக்கான (55 சீட்கள்) காலாண்டு வரி ரூ.75 லிருந்து ரூ.100 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
வாடகை மேக்சி கேப்களுக்கு (12 சீட்கள்) காலாண்டு வரி ரூ.175லிருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண வாடகை மினி பஸ்களுக்கு 5 ஆண்டுகளுக்கான வரி ரூ.3,500 லிருந்து ரூ.4,000 ஆகவும், சுற்றுலா மினிபஸ்களுக்கு 5 ஆண்டுகளுக்கான வரி ரூ.5,000 லிருந்து ரூ.6,500 ஆகவும் உயர்த்தப்பட்ள்ளது
சரக்கு லாரிகளுக்கு சுமையின் அளவைப் பொறுத்து வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 3,000 கிலோ வரை சுமை ஏற்றும் வாகனத்திற்கு ரூ.545 லிருந்து ரூ.600 ஆகவும், 3,001 முதல் 5,500கிலோ வரை சுமைகொண்ட வாகனத்திற்கு ரூ.885 லிருந்து ரூ. 950.50 ஆகவும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல 5,501 கிலோ முதல் 9,000 கிலோ வரை சுமை கொண்ட வாகனத்திற்கு ரூ.1,355 லிருந்து ரூ.1,500.90ஆகவும், 9,001 கிலோ முதல் 12,000 கிலோ வரை சுமைகொண்ட வாகனத்திற்கு ரூ.1,755 லிருந்து ரூ.1,900 ஆகவரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் 12,001 கிலோ முதல் 13,000 கிலோ வரை சுமை கொண்ட வாகனத்திற்கு ரூ.1,930 லிருந்து ரூ.2,100ஆகவும், 13,001 கிலோ முதல் 15,000 கிலோ வரை சுமைகொண்ட வாகனத்திற்கு ரூ.2,300 லிருந்து ரூ.2,500ஆகவும் வரிகள் உயர்த்ததப்பட்டுள்ளன.
15,000 கிலோவுக்கு மேல் சுமைகொண்ட வாகனத்திற்கு ரூ.2,300ருடன் சேர்த்து, ஒவ்வொரு கூடுதல் 250கிலோவுக்கும் ரூ.50 ம் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது அது ரூ.2,500ருடன் சேர்த்து, ஒவ்வொரு கூடுதல் 250கிலோவுக்கு ரூ.100ம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகனங்களுக்கு எந்திரத் திறன் 50 சி.சி.க்கு கீழ் உள்ள வண்டிகளுக்கு ஆயுட்கால வரி ரூ.1000என்றும், 51 சி.சி. முதல் 75 சி.சி. வரை உள்ள வண்டிகளுக்கு ரூ.1,000 லிருந்து 1,300 ஆகவும்உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல 76 சி.சி. முதல் 170 சி.சி. வரையிலான வண்டிகளுக்கு ரூ.1,750 லிருந்து ரூ.2, 200 ஆகவும், 170சி.சி.க்கு மேல் உள்ள வண்டிகளுக்கு ரூ. 2,340 லிருந்து ரூ.2,500 ஆகவும் ஆயுட்கால வரிகள்உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications