ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை: தம்பிதுரை
சென்னை:
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழக கல்வித்துறைஅமைச்சர் தம்பிதுரை கூறினார்.
கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் எந்தவித முறைகேடும்நடக்கவில்லை என்றும் யாரும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர்தம்பிதுரை கூறினார்.
இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
கடந்த மாதம் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகளின் விடைத் தாள்கள் திருத்தும் பணிமுடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,100 ஆசிரியர்களும் பணி நியமனம்செய்யப்படுவார்கள்.
மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். தேர்வு வெளிப்படையாகவும் சிறப்பானமுறையிலும் நடைபெற்றது. விடைத் தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வு எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண்களில் எந்த முறைகேடும் நடந்திருக்க வாய்ப்பில்லைஎன்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மொத்த மதிப்பெண்களில் 1 மதிப்பெண்போனசாகவும், 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனசாகவும்வழங்கப்படுகிறது. என்.சி.சி. போன்றவற்றில் பங்கெடுத் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்கள்போனசாக வழங்கப்படுகிறது.
எனவே அதிகபட்சமாக 105 மதிப்பெண்கள் வரை ஒருவர் பெற வாய்ப்பிருக்கிறது. இந்த மதிப்பெண்களும்கம்யூட்டர் மூலமாகவே அளிக்கப்படுகின்றன.
மேலும் வயது வந்தவர்கள் யாரும் வேலை கிடைக்கமால் இருக்கக் கூடாது என்பதற்காக, வயது வரம்பும் 37 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சீரிய முறையில் தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இடைத்தரகர்களை நம்பி யாரும்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
அடுத்த ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை விடைத் தாள்களைத் திருத்துவதற்கு வேறு பள்ளிஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications