கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணமலைக்கு சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
திருவண்ணாமலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில்கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக காட்பாடியிலிருந்து நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மதியம் 1.30 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவண்ணாமலைசென்றடையும்.
தாம்பரத்தில் இருந்தும் இன்று இரவு 11.15 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச்செல்கிறது. இந்த ரயில் நாளை அதிகாலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
சென்னை, ஜோலார்பேட்டை மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து வழக்கமான ரயில்களில் வரும்பக்தர்கள், திருவண்ணாமலை செல்வதற்கு வசதியாக இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications