காண்டஹாருக்குள் நுழைந்தது நார்த்தர்ன் அலையன்ஸ்?
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காண்டஹாருக்குள்ளும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே விமானங்களின் மூலம் காண்டஹார் விமான நிலையம் அருகே இறங்கிய அமெரிக்க மெரைன்வீரர்கள், விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குத் துணை நின்று காண்டஹார் நகரைப் பிடிக்கும்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானில் காண்டஹார் நகரை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான்கள்,அந்நகரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
காண்டஹாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலிபான்களுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும் கடுமையானதுப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே காண்டஹார் நகரின் கிழக்குப் பகுதிக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ஊடுருவி விட்டதாகஅதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் நிருபர்கள் யாரும் காண்டஹாருக்குள் இன்னும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதை வைத்தேஇன்னும் காண்டஹாருக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நுழையவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்என்றும் வேறு சில தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்க விமானங்கள் குண்டு மழை
இதற்கிடையே காண்டஹார் நகரில் உள்ள தலிபான் நிலைகளின் மேல் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
நேற்று (வியாழக்கிழமை) மட்டும் எட்டு தலிபான் நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அல்-காய்தா தலைவர்கள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் பதுங்கு குழிகளிலும் குகைப் பகுதிகளிலும்தான்முக்கியமாகக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
சுமார் 120 முறை நேற்று மட்டும் அமெரிக்க விமானங்களால் காண்ஹார் நகரம் தாக்கப்பட்டுள்ளது.
அல்-காய்தா மற்றும் தலிபான் இயக்கத் தலைவர்களைக் குண்டு வீசுவதன் மூலம் குகைகளை விட்டுவெளியேற்றுவது பெரும் பாடாகத்தான் உள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications