கடலூர் அருகே மீண்டும் விஷச் சாராயம்: 2 பெண்கள் உள்பட 13 பேர் பலி
கடலூர்:
கடலூர் அருகே நேற்று (வியாழக்கிழமை) இரவு விஷச் சாராயம் குடித்து 2 பெண்கள் உள்பட 13 பேர்உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளர்கள் சிலர் ஒரு மதுக்கடையில் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.
அந்தச் சாராயத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே ஜோதி என்பவர் சுருண்டு விழுந்து இறந்தார். மற்றவர்கள்மயங்கி விழுந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
பண்ருட்டி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், இச்சம்பவத்தில் மயங்கிய மற்ற 45பேர் கடலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் மூன்று பேர் பலியாகினர். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 25பேரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே இந்த விஷச் சாராயத்தை விற்ற மதுக் கடைக்காரர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications