இந்திய சாப்ட்வேர் நிபுணர்களை அழைக்கிறது சீனா
பீஜிங்:
அமெரிக்கப் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அங்கு சென்ற இந்திய சாப்ட்வேர் வல்லுநர்கள்தற்போது சீனாவுக்குச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்த சீன சாப்ட்வேர் நிறுவனங்களான லெஜெண்ட், பவுண்டர் மற்றும் ஹூவேபோன்ற நிறுவனங்கள் மீண்டும் சீனாவுக்கு மாற்றப்பட்டன. இந்த நிறுவனங்கள் தற்போது இந்திய சாப்ட்வேர்வல்லுநர்களை பணிக்கு அழைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன.
மேலும் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான நோகியா, சீமென்ஸ் மற்றும் பிராக்டர் அன்டு கேம்பிள்போன்ற நிறுவனங்களில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் தினேஷ் பட்நாயக் கூறுகையில்,
சீனாவில் வேலைபார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சீன அரசுதற்போது தங்கள் நாட்டுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும்தளர்த்தியுள்ளதால், இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் டிசம்பர் 11ம் தேதிக்குப் பிறகு உலக வர்த்தகக் கழகத்தின் முழுநேர உறுப்பினராக சீனா மாறிய பிறகுஇந்தியர்கள் இங்கு வேலை வாங்குவது மேலும் எளிதாகும் என்றார்.
இதற்கிடையில் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகம்மற்றும் தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக உள்ளவர்களும், சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளவர்களும்விசா இல்லாமலே நிரந்தரமாகத் தங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications