பஸ்-மின் கட்டண உயர்வுகள்: இன்று நள்ளிரவு முதல் அமல்
சென்னை:
இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் பஸ் மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற கட்டண உயர்வுகள் அமலுக்குவருகின்றன.
பஸ் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் டிசம்பர் 1ம்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 30ம் தேதி நள்ளிரவு (அதாவது இன்று) இரவு 12 மணிக்கு மேல் இந்த உத்தரவுகள் அமலுக்கு வருகின்றன.
இதன்படி இனிமேல் சிட்டி பஸ்களில் குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.2 ஆக இருக்கும். அதிகபட்சமாக ரூ.10இருக்கும். ரூ.2க்குப் பிறகு 50 பைசா கூடுதலாக அடுத்தடுத்த டிக்கெட்டுகள் இருக்கும். அதாவது 2.50, 3.00, 3.50என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வெளியூர்ப் பேருந்துக் கட்டணம் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இனி 25 பைசாவுக்கு வேலையில்லை. இதனால் பஸ்களில் சில்லறைப் பிரச்சினையும் இருக்காது என்றுஎதிர்பார்க்கலாம். ஆனால் கண்டக்டர்கள் 50 பைசா சில்லறை இல்லை என்று கூறினாலும் ஆச்சயப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications