போலீசார் சஸ்பெண்ட், இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

கள்ளச்சாராய புழக்கத்தைத் தடுக்கத் தவறியதாக 3 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து விழுப்புரம் சரகடிஐஜி சிதம்பரசாமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கேஸ்வர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், புதுப்பேட்டை காவல் நிலையஇன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்.

மேலும், விஷச் சாராயச் சாவுகள் சம்பவம் நடந்த புதுப்பேட்டை காவல் நிலையத்திலுள்ள காவலர்கள்ஒட்டுமொத்தமாக வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, பாண்டிச்சேரி எல்லைப் பகுதியில் போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீவிர சோதனையில்ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

3 மாதங்களில் 4வது சம்பவம்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 4வது கள்ளச் சாராய சாவு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி செங்குன்றம் அருகே அக்டோபர் 6ம் தேதி நடந்த விஷச் சாராயச்சம்பவத்தில் 15 பேர் இறந்தனர்.

பின்னர் புழல் அருகே கள்ளச்சாராயம் குறித்து 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இவற்றைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி காஞ்சிபுரம் அருகே அச்சரப்பாக்கம் என்ற இடத்தில் 3 பேர்உயிரிழந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+