புலிகள் மீதான தடையை நீக்க முடியாது: சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா கூறினார்.
இதற்கு இலங்கை அதிபர் சந்திரிகா மறுத்துவிட்டார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புலிகள் அமைதிப் பாதைக்குத் திரும்பி, நாட்டில் வன்முறை ஒழிந்து மீண்டும் அவர்கள் போராட்டத்திற்கு திரும்பமாட்டார்கள் என்ற நிலை உருவாகும் போதுதான் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படும்.
ஆனால் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீதுஅமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுதான் புலிகள் தங்கள் இயக்கத்தின் மீதானதடையை விலக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளபாதுகாப்புப் படையை வாபஸ் பெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே புலிகளுக்குவாக்குறுதி அளித்துள்ளார்.
எந்த ஒரு பொறுப்பான அரசும் இவ்வாறு தொடர்ந்து போராட்டம் நடக்கும் பகுதிகளில் இருந்து பாதுகாப்புப்படையை வாபஸ் பெறாது என்று அந்த அறிக்கையில் சந்திரிகா கூறியுள்ளார்.
இதற்கிடையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிவெற்றிபெற்றால், தமிழர் பகுதியை ஆளும் பொறுப்பை புலிகளிடம் ஒப்படைப்பதாக ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சியான சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சியும் இவ்வாறு தான் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிவருகிறது.
இதை உண்மையாக்கும் வகையில் பிரபாகரனும், "நியாயத்திற்காகப் போராடும் இயக்கத்திற்கு வாக்களியுங்கள்.இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு நீதிகிடைக்கும் வகையில் சிங்கள மக்கள் வாக்களிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிரபாகரனின் பேச்சை விமர்சித்துப் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர் கூறுகையில்,பிரபாகரனின் பிரிவினைவாதப் பேச்சுக்கு மக்கள் செவி சாய்யக்கக் கூடாது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications