"பம்மல்" ஓ. பன்னீர்செல்வம்
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்காமல்முதல்வர் பன்னீர்செல்வம் அமைதி காத்து வருகிறார். அதற்கு மாறாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் பல்வேறுஅரசுப் பிரச்சினைகளுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.
இது பத்திரிக்கை நிருபர்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தை சமீபத்தில் உலுக்கிய மிகப் பெரிய விஷயம் பஸ் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டவேலை நிறுத்தம்.
ஸ்டிரைக் முடிந்த பிறகு சில நாட்களில் அதிரடியாக பஸ் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களும்விலைவாசிகளும் உயர்த்தப்பட்டன. தமிழக அரசு இதுதொடர்பாக மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
இந்த கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கலாம் என்று நிருபர்கள் முயன்றபோதும் முதல்வர் சிக்கவில்லை. "மினிபட்ஜெட்" அறிவிக்கப்பட்ட புதன்கிழமையிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பன்னீர்செல்வம் கோட்டைக்குவரவில்லை.
வெள்ளிக்கிழமை மாலைதான் அவர் மீண்டும் பணிக்கு வந்தார். கோட்டை செய்தியாளர்கள் அறையிலிருந்துநிருபர்கள் அனைவரும் போன பின்னர் வந்துதான் பணிகளைக் கவனித்துள்ளார். இதன் மூலம் நிருபர்களை அவர்தவிர்ப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் பண்ருட்டி அருகே விஷச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்தும் முதல்வர் கருத்துஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த இரு முக்கிய சம்பவங்கள் குறித்தும் முதல்வர் கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், முன்னாள் முதல்வர்ஜெயலலிதா விரிவான பதில்களைத் தந்துள்ளார். கட்டண உயர்வு குறித்து அவர் ஒரு முதல்வர் விளக்கும் வகையில்செய்தியாளர்களிடம் விவரித்தார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் தங்களை எப்படியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும் முதல்வர்பன்னீர்செல்வத்தை சில நாட்களாக பார்க்க முடியாததால், நிருபர்கள் கூட சோகமாக உள்ளனர். இது பலகேள்விகளையும் அவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
முதல்வர் பன்னீர் செல்வம் மீது ஜெயலலிதா அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்துத்தொழிலாளர் பிரச்சினையின்போது அவர் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை என்ற ஆதங்கம் ஜெயலலிதாவிடம்எழுந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இருப்பினும் பன்னீர்செல்வத்தை நீக்கும் எண்ணம் எதுவும் ஜெயலலிதாவிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, நிருபர்களைச் சந்திப்பதை தவிர்த்து பம்மிக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வம்திங்கள்கிழமையாவது தங்களை நிச்சயம் சந்திப்பார் என்று பத்திரிக்கை நிருபர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications