விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விரைவில் ரத்து
சென்னை:
வசதி படைத்த பெரிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படலாம் என்றுதெரிகிறது.
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மின், பஸ், பால், ரேசன் பொருள்களின் விலையை அரசு உயர்த்தியது.ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவசமின்சாரமும் தொடரும் என்று அறிவித்தது.
இந்த கட்டண உயர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆங்காங்கேகண்டக்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே அடிதடி கூட நடக்கிறது.
அனைவருமே இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் வசதிபடைத்த விவசாயிகள் தான் இலவச மின்சாரத்தால் பலனடைந்து வருகின்றனர். சிறிய அளவில் விவசாயம்செய்பவர்களின் நிலங்களில் மோட்டார்களே கிடையாது. அவர்களுக்கு இலவச மின்சாரத்தால் எந்தப் பலனும்இல்லை.
இதை பல தரப்பினரும் சுட்டிக் காட்டி வருவதையடுத்து இந்த இலவச மின்சாரத்தை வசதி படைத்தவிவசாயிகளுக்கு வழங்குவதை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முதலில் ஓட்டுக்காக இந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு விரும்பாமல் இருந்து வந்தது. ஆனால், மாநிலம்முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இலவசத்துக்கு முடிவு கட்டத் திட்டமிட்டுள்ளது.
மின் கட்டணம் குறையாது- அமைச்சர் திட்டவட்டம்:
இந் நிலையில் தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் எக் காரணம் கொண்டும் மீண்டும் குறைக்கப்படமாட்டாது என மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக மின் வாரியத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 4,938 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் இதனைஎதிர் கொள்ளவே கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் கூறினார்.
இப்போது செய்யப்பட்ட கட்டண உயர்வுகள் மூலம் அரசுக்கு ரூ. 1,557 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அம்மா (ஜெயலலிதா) சொன்னதுதான் முடிவு என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications