நக்கீரன் நிருபர் கைது: உண்மை நிலையை கண்டறிய குழு- நிருபர்கள் முடிவு
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டது குறித்த உண்மை நிலையைத் தெரிந்து கொள்வதற்காககுழு ஒன்றை அமைப்பது குறித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த நிருபர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 20ம் தேதி வீட்டை விட்டுக் கிளம்பிய சிவசுப்பிரமணியன், திடீரென்று காணாமல் போய்விட்டதாகஅவருடைய மனைவி ஜெயந்தி புகார் செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகப் போலீசார் அவரைக் கைது செய்திருப்பதாக மறுநாள் தெரிய வந்தது. கர்நாடகப் போலீசார்அவரைக் கடத்திக் கொண்டு சென்று கைது செய்ததாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து பல குழப்பங்கள் இரு மாநிலங்களிலும் நிலவி வந்தன. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டவழக்கில் வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்த காரணத்திற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்படலாம்என்ற அளவுக்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே நக்கீரன் நிருபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னையில் நிருபர்கள் கடந்த வாரம்போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நக்கீரன் நிருபரின் கைது குறித்து உண்மையான தகவல்களை அறியும் பொருட்டு குழு ஒன்றைஅமைப்பது என்று சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், சென்னை பிரஸ் கிளப், சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு மற்றும்ஜேர்னலிஸ்ட்ஸ் ஆக்ஷன் குரூப் ஆகிய நான்கு சங்கங்களும் இணைந்து இம்முடிவை எடுத்துள்ளன.
இதன்படி தேர்ந்தெடுக்கப்படும் நிருபர்கள் குழுவினர் கர்நாடகா சென்று, அங்கு சிறையிலிருக்கும்சிவசுப்பிரமணியத்தைச் சந்தித்து, அவர் கைது செய்யப்படுவதற்கு முன் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதுகுறித்து விசாரணை செய்வார்கள்.
இதைத் தவிர இது குறித்து மேலும் சில தகவல்களைப் பெறுவதற்காக தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை மற்றொரு நிருபர்கள் குழு சந்தித்து விவரங்களைத் திரட்ட உள்ளது.
இரு குழுக்களும் தங்கள் அறிக்கைகளை வரும் 8ம் தேதி நடக்கும் கூட்டத்தில் சமர்ப்பித்த பிறகு, அடுத்த கட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications