எம்.எல்.ஏ. ஆன பிறகே முதல்வராக ஜெ. முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன பிறகே முதல்வர் பதவியை ஏற்கஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலில் நிற்கத் தடையாக இருந்த டான்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் ஜெயலலிதா. இதனால்உடனடியாக முதல்வர் பதவியை ஏற்பார் என்று பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் அதிமுக வட்டாரத்தில் வேறு மாதிரியாக பேச்சு அடிபடுகிறது. முதல்வர் பன்னீர் செல்வத்தை ராஜினாமாசெய்து விட்டு உடனடியாக முதல்வர் பதவியில் அமர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
முறையாக தேர்தலில் நின்று, தன்னைத் தேர்தலில் நிற்க விட முடியாமல் தடுத்தவர்களுக்கு பதிலடியாக எம்.எல்.ஏ.ஆன பிறகே முதல்வர் பதவியில் அமர ஜெயலலிதா விரும்புவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஏற்கனவே ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்ததங்கத் தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தற்போது தேனி மாவட்ட அதிமுகசெயலாளராக இருக்கிறார்.
பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தோடு சேர்த்துஆண்டிப்பட்டிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் போவதாக ஜெயலலிதாவே உறுதியுடன் கூறியுள்ளார். தேர்தலில் நின்று மகத்தானவெற்றியைப் பெற்ற பின்னரே கோட்டையில் நுழையவும் அவர் முடிவு செய்துள்ளார்.
எனவே, இப்போதைக்கு பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. இன்னும் இண்டுமாதங்களுக்கு அவரே முதல்வராக நீடிப்பார் என்றும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications