கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு விவரம்
சென்னை:
சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் இயற்கை அழகை பாதிக்காத வண்ணம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல்அங்கு கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அங்கு கட்டப்பட்ட பிளசன்ட் ஸ்டே ஓட்டல் அந்த விதிமுறையை மீறி, அதிக உயரத்திற்குக்கட்டப்பட்டுள்ளது.
இதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, நகராட்சித்துறைசெயலாளரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எச்.எம். பாண்டே ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக அனுமதிஅளித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும் ஓட்டல் நிர்வாகிகள் மிட்டல், பாளை.சண்முகம் ஆகியோரதுபெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில்ஜெயலலிதாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், செல்வகணபதி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கும் தலா 2ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்புக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கூறப்பட்ட, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 5 பேரும் சென்னைஉயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த அப்பீல் வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி தினகர் முன்னிலையில், கடந்த 9ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடைபெற்றது. பிறகு தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி தினகர் வெளியிட்டார். அதன்படி,கொடைக்காணல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 5 பேரும்விடுதலை செய்யப்படுகின்றனர் என்று அறிவித்தார்.
முன்னாதாக டான்சி வழக்கிலும் ஜெயலலிதா, சசிகலா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டதாக தீர்ப்புக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அவர் விரைவில் மீண்டும்முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications