பந்த்தைக் கைவிட எதிர்க் கட்சிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சென்னை:
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியைச் சீர்செய்யய கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதைப்புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் பந்த்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடந்த 1ம் தேதி முதல் பஸ், மின்சாரக் கட்டணங்கள், பால் விலை, அரிசி விலை ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.இந்த விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகள் கூட்டாக பந்த் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தொலை நோக்குப் பார்வையில் செயல்படாததால், எந்தத் தொழிலும்வளர்ச்சியடையவில்லை.
நிதி நிலையைச் சீர்செய்யவும் இல்லை. அதற்கான முயற்சியை மேற்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் மக்கள்ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்பித் தேர்ந்தெடுத்ததால், நிதிச்சுமை அதிமுக அரசின் மீது விழுந்துள்ளது.போக்குவரத்துத் துறையிலும் ரூ.2,035 கோடி நட்டத்தை திமுக அரசு ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
தற்போது பஸ்-மின்சாரக் கட்டணங்கள் சற்று உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மற்ற மாநிலங்களைவிடபொருட்களின் விலை குறைவாகத் தான் உள்ளது. தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள நட்டத்தைச்சீர்செய்யத்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வைக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
சட்டசபையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வைத்தோம், அப்போது எல்லாத் தோழமைக் கட்சிகளும் இந்தச்சீர்கேடுகள் பற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள்.
கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள சீர்கேடுகளைச் சரிசெய்யத்தான் இது போன்ற நடவடிக்கைகள்எடுக்கிறோம். இதை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நன்கு அறிவார்கள். இதுபோன்ற நடவடிக்கைஎடுக்காவிட்டால் வருங்காலத்தில் அரசாங்கத்தை நடத்துவதே கேள்விக்குறி ஆகிவிடும்.
எனவே பொதுமக்கள் இதையெல்லாம் உணர்ந்து எதிர்க்கட்சிகள் நடத்தும் பந்த்துக்கு ஆதரவு தரக்கூடாது. இந்தஅரசின் நிலையை அரசியல் கட்சிகளும் உணர்ந்து பந்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications