கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
மொஹாலி:
சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயின் மந்திரப் பந்து வீச்சுக்கு இங்கிலாந்து அணியினர் கட்டுப்பட்டதால், முதல்கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தன் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியினர், இன்று(வியாழக்கிழமை) காலை நான்காவது நாள் ஆட்டத்தைத் துவங்கினர்.
முதல் எட்டு ஓவர்களுக்கு இங்கிலாந்து மட்டை வீச்சாளர்களை இந்திய அணியினரால் அசைக்கவே முடியவில்லை.ஆனால் 28வது ஓவரின் கடைசிப் பந்தில் யோஹனான் பந்து வீச்சுக்கு "இரை"யானார் இங்கிலாந்து துவக்கஆட்டக்காரர் மார்க் புட்ச்சர்.
தொடர்ந்து மற்றொரு துவக்க ஆட்டக்காரர் டிரஸ்கோத்திக்கும் (46 ரன்கள்) யோஹனான் பந்தை சித்திக்கிடம் கேட்ச்கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணியினர் மளமளவென்று சரிய ஆரம்பித்தனர். தோர்ப்பே மட்டும் அரை சதத்தை (62ரன்கள்) தாண்டினார்.
இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 231 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பெரும் போராட்டமே நடத்தியது.அதோபோல் இன்னிங்ஸ் வெற்றி பெறவேண்டும் என்று இந்திய அணியினரும் கடும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
கும்ப்ளேயின் பந்து வீச்சுக்கு இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பலியாகி, பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தாலும், ஒரு வழியாக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தனர். ஆனால் கூடுதலாக 4 ரன்களை மட்டுமேஎடுத்த நிலையில் இங்கிலாந்து அணி "ஆல் அவுட்" ஆனது.
வெறும் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் முதல்பந்தை பவுண்டரிக்கு விரட்டி விட்டு, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்அபாரமாக வென்றது. இந்த முதல் டெஸ்ட் போட்டி முடிவதற்கு இன்னும் ஒரு நாள் முழுமையாக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வென்ற ஹர்பஜன் சிங், சிறப்பாக விளையாடிகதற்காககவுரவிக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் மளமளவென்று 6 விக்கெட்டுகளைச் சாய்த்தகும்ப்ளேக்குதான் "மேன் ஆப் த மேட்ச்" விருது சென்றது.
ஸ்கோர் விவரம்:
இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸ் - 238/10 (76.3 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ் - 235/10 (77.4 ஓவர்கள்)
இந்தியா
முதல் இன்னிங்ஸ் - 469/10 (169 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ் - 5/0 (0.2 ஓவர்)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications