மும்பையில் அல்-கொய்தா தீவிரவாதி கைது
மும்பை:
பின்லேடனின் அல்-காய்தா தீவிரவாதக் கும்பலின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி மும்பையில் கைது செய்யப்பட்டான்.
முகம்மத் அப்ரோஸ் ரஜாக் என்ற இந்தத் தீவிரவாதியை கடந்த அக்டோபர் 2ம் தேதியே மும்பை சிறப்புப் போலீஸ் படை சுற்றி வளைத்துவிட்டது. ஆனால்,கடந்த 3ம் தேதி தான் அவனை முறைப்படி கைது செய்தோம். நியூமும்பை ஹோட்டலில் வைத்து அவனைப் பிடித்தோம்.
இவன் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பலமுறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஹாங்காங் நகரங்களுக்குசென்று வந்துள்ளான்.
இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மிக முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அல்-காய்தா அமைப்பு 4 தற்கொலைப் படைகளை உருவாக்கியுள்ளது.அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடம், இங்கிலாந்து பாராளுமன்றம், ஆஸ்திரேலியாவில் உள்ல ரோமல் டவர், இந்திய நாடாளுமன்றம்ஆகியவற்றைத் தகர்ப்பதற்காக இந்தத் தற்கொலைப் படைகள் உருவாக்கப்பட்டதாக அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.
டெக்ஸாஸ், லண்டன், மெல்போர்ன் ஆகிய இடங்களில் உளள விமானப் பயிற்சிக் கல்லூரிகளில் இவன் பொய்யான சான்றிதழைக் கொடுத்து போயிங்விமானங்கள் ஓட்டும் பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்துள்ளான்.
இவனுக்கு அடையாளம் தெரியாத சில வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் வந்துள்ளது. இவனைப் பிடித்த உடன் உள்துறை அமைச்சர் அத்வானிக்குத் தகவல்கொடுத்தோம். உடனே மத்திய அரசும் இவனைப் பற்றி விசாரித்தது. இவனைப் பற்றி ரகசிய விசாரணை நடந்து வந்ததால் இவன் குறித்து வெளியில்தகவல் வெளியிட வேண்டாம் என அத்வானி உத்தரவிட்டார். இதனால் தான் 2 மாதமாக வெளியில் சொல்லவில்லை.
இவனுக்கு ஈ-மெயில் மூலமாகத் தான் உத்தரவுகள் வந்தன என்பதையும் கண்டுபிடித்தோம் என்றார்.
புஜ்பல் பேசி முடித்ததும் போலீசாருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிர மாநில சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களும் மேஜையைத் தட்டிமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications