இந்திய அணியில் மீண்டும் சேவாக்

Subscribe to Oneindia Tamil

மொஹாலி:

மொஹாலியில் இன்று (வியாழக்கிழமை) முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில்இந்திய அணியிலிருந்து வம்படியாக நீக்கப்பட்ட வீரேந்திர சேவாக், அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் 2வதுடெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியை அங்கீகரிக்காத சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), சேவாக்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் படி அவர் மொஹாலி டெஸ்டில் ஆடக்கூடாது என்று கூறியிருந்தது.

ஆனால் இப்போட்டியில் சேவாக் நிச்சயம் ஆடுவார் என்று இந்திய கிரிக்ட்ெ போர்டு (பி.சி.சி.ஐ.) அறிவித்தது.தேர்வுக் குழுவும் அவரைத் தேர்ந்தெடுத்து விட்டது.

இதனால் இங்கிலாந்து அணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலைஏற்பட்டது.

இதற்கிடையே இதுகுறித்து பி.சி.சி.ஐயுடன் பேச்சு நடத்த ஐ.சி.சி. தயார் என்று கூறியது. அதன் படி பி.சி.சி.ஐ.தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடன் ஐ.சி.சி. தலைவர் மால்கம் ஸ்பீடு டெலிபோனில் பேசினார்.

இருவரும் பேசி முடிவெடுத்ததையடுத்து, மொஹாலி டெஸ்டிலிருந்து வீரேந்திர சேவாக் வெளியேற்றப்பட்டார்.அவருக்குப் பதிலாக ஜேக்கப் மார்ட்டின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மொஹாலி டெஸ்ட் முடிவடைந்தது. இன்னும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தது இந்தியா.

அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 11ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் விளையாடசேவாக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சியின் கருத்துப்படி மொஹாலி டெஸ்டில் விளையாடாமல் போனதன் மூலம் சேவாக் தண்டனையைஅனுபவித்து விட்டார். தற்போது அடுத்த டெஸ்டில் ஆடுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

மேலும், காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல்ஸ்ரீநாத்தும் இரண்டாவது டெஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் ஆறிவிட்டது என்று உரிய மருத்துவச் சான்றிதழை இன்று அவர் பி.சி.சி.ஐயிடம் சமர்ப்பித்த பிறகு, இன்றுதேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியக் குழுவில் அவரும் இடம் பெற்றார்.

இந்திய அணி விவரம்: சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், சிவசுந்தர் தாஸ், கொன்னோர் வில்லியம்ஸ், வி.வி.எஸ். லக்ஷ்மண், தீப் தாஸ்குப்தா, வீரேந்திர சேவாக், அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், டினு யோஹானன், இக்பால் சித்திக், ஷரன்தீப் சிங்.

இந்திய அணிக்கு டால்மியா வாழ்த்து:

இதற்கிடையே, மொஹாலி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு டால்மியா வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்றும் கேப்டன்கங்குலியிடம் கூறியுள்ளார் டால்மியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+