பெரியார் மையம் இடிப்பு: ஜெ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டது குறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமானஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 20ம் நூற்றாண்டில் மிகப் பெரும் சமூக தீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் பெரியார். டெல்லியில் அவருடையபெயரில் கட்டப்பட்ட மையத்தை இடித்துள்ளனர்.

இந்த மையம் இடிக்கப்பட்டிருப்பதை டெல்லி மாநகராட்சி தவிர்த்திருக்க வேண்டும்.

இச்சம்பவத்திற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.தற்போது அவர் பெரிதும் பரிதாபத்திற்குரியவராகி விட்டார் என்றார் ஜெயலலிதா.

தவிக்கும் மாணவர்கள், பெண்கள்:

பெரியார் மையம் இடிக்கப்பட்டதையடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கம்ப்யூட்டர்கல்வி கற்க வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

இது பற்றி தினமணியின் சிறப்பு நிருபர் நிலைமையை நேரில் கண்டு கூறியதாவது:

இந்த மையத்தில், ஏழை மாணவர்களுக்கு கணிப்பொறிப் பயிற்சி,பெண்களுக்கு தையல் பயிற்சிஅளிக்கப்பட்டதோடு கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேலைகள் அளிக்கப்பட்டும் வந்தன. பெரியார்அருங்காட்சியகம், நூலகம் ஆகியவையும் இங்கு உள்ளன.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிடிஏ அதிகாரிகளால் இந்த மையம் இடிக்கப்பட்டபோது மாணவர்கள்அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். மையத்தில் உள்ள கணிணி உட்பட விலை உயர்ந்த சாதனங்களைஎடுப்பதற்கு கூட அவகாசம் தரப்படவில்லை.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏழை மாணவர்கள் இங்கு கணிணி பயிற்சி பெற்று வந்தனர். கட்டடம் இடிக்கப்பட்டதால்இவர்கள் பயிற்சி பெறமுடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் வேறு எங்கு சென்றாலும் கட்டணம் செலுத்தியாகவேண்டிய நிலையில்தான் இப்போது உள்ளனர்.

மேலும் அருகில் உள்ள பிஸ்வாஸன், சாவ்லா, பார்தர், தோல்சராஸ் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தஏழைப்பெண்கள் தையல் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்கும் அடுத்து என்ன வழி என்று தெரியவில்லை.

மேலும் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மையத்தில் இலவசமாகவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். இனிஇவர்கள் நீண்ட தொலைவில் உள்ள நஸாப்கர் செல்லவேண்டும். அங்கும் அவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகிடைக்காது.

இந்த மையம் இடிக்கப்பட்டதால் ரூ.4 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தினமணியின் சிறப்பு நிருபர்கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+