மகாகவி பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.
சென்னையில் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி-கல்லூரிகளிலும், இலக்கிய மன்றங்களிலும் பாரதியார் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,கவிதைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.
இன்னும் சில இடங்களில் பாரதியார் குறித்த சிறப்பு சொற்பொழிவுகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications