கிரிக்கெட்: கும்ப்ளே அபாரம்
அகமதாபாத்:
அனில் கும்ப்ளேயின் பந்து வீச்சுச் சுழலில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், இன்று (செவ்வாய்க்கிழமை)ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தனர்.
மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு, சுடச்சுட இரண்டாவது டெஸ்ட்டையும்தொடங்கினர் இந்திய அணியினர்.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட் செய்யத் தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய அவ்வணியின் பட்ச்சரும்,டிரஸ்கோத்திக்கும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
முதல் 124 ரன்களுக்கு இவர்கள் இருவரையும் அசைக்கவே முடியவில்லை. இந்தியப் பந்து வீச்சாளர்களும் 39ஓவர்களை வீசிக் களைத்துப் போய்விட்டனர்.
ஆனால் கும்ப்ளே களைத்து, சளைத்துப் போகாமல் 40வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவதுபந்திலேயே பலன் கிடைத்தது.
கும்ப்ளேயின் பந்து பட்ச்சரின் மட்டையில் லேசாக உரசிக் கொண்டு போய், இந்திய விக்கெட் கீப்பர் தீப்தாஸ்குப்தாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
இதற்குப் பிறகே, இந்திய அணிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனாலும் கும்ப்ளே மட்டுமே அடுத்தடுத்துவிக்கெட்டுகளை எடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டே இருந்தார்.
இங்கிலாந்து வீரர்களை சொற்ப ரன்களிலேயே பெவிலியனுக்கு அனுப்பிய கும்ப்ளே, டிரஸ்கோத்திக்கை மட்டும்ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன்னுடைய ஸ்கோரை மட்டுமல்லாமல் அணியின் ஸ்கோரையும் மளமளவென்றுஉயர்த்திக் கொண்டே சென்றார் டிரஸ்கோத்திக்.
ஆனால் கும்ப்ளேயின் பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்தது. டிரஸ்கோத்திக் 99 ரன்கள் எடுத்திருந்தபோது,அவருடைய மட்டையை உரசிச் சென்ற பந்து மீண்டும் தாஸ்குப்தாவின் கைகளைச் சென்றடைந்தது. சதத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்தில் டிரஸ்கோத்திக் பெவிலியன் சென்றார்.
அவருடன் ஆடிக் கொண்டிருந்த பிளின்டாப்பின் (0 ரன்கள்) விக்கெட்டையும் கும்ப்ளே சாய்த்தார்.
பின்னர் வந்த ராம்பிரகாஷ் 37 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கரின் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அவருடன் ஆடிக் கொண்டிருந்த ஒயிட்டுன் (42 ரன்கள்) ஜோடி சேர்ந்த போஸ்டர் (15 ரன்கள்) நல்ல கம்பெனிகொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஸ்கோர் விவரம்:
இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸ் - 277/6 (90 ஓவர்கள்)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications