கோபாலுக்கு முன் ஜாமீன்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக, "நக்கீரன்" ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார், தாளவாடி என்னும் இடத்திற்கு அருகில், சந்தன வீரப்பனால் கடத்திசெல்லப்பட்டார். அப்போது அரசு தூதராக நியமிக்கப்பட்ட கோபால், ராஜ்குமாரை மீட்க பலமுறை பேச்சுவார்த்தைநடத்துவதற்காக காட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், ராஜ்குமார் கடத்தலில் தொடர்பு இருப்பதாக நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து கோபாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் தாளவாடி போலீசார் எந்நேரமும் தன்னைக் கைது செய்யலாம் என்று கருதிய கோபால் முன்ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், கோபாலுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தன் தீர்ப்பில்கூறியுள்ளதாவது:
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கோபால் சேர்க்கப்படவில்லை என்று அரசு தரப்பினர் கூறுகின்றனர்.
அப்படி சேர்க்கும் பட்சத்தில், பத்து நாட்களுக்குள் கோபால், 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக போலீசாரிடம் கைதான நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்துக்கு நேற்று ஜாமீன்நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications