கைதான 33 சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று (புதன்கிழமை) காலை போலீசாரால் கைது செய்யப்பட்ட 33 சட்டக் கல்லூரி மாணவர்களும் பிற்பகல்விடுதலை செய்யப்பட்டனர்.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனால் வேண்டத்தகாத சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும்சட்டக் கல்லூரிகளை மூடிவிட தமிழக அரசு உத்தரவிட்டது. ஹாஸ்டல்களும் மூடப்பட்டு விட்டன.

இதை எதிர்த்து சென்னை டாக்டர்அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் சாகும்உண்ணாவிரதத்தைத் துவக்கினர். இதையடுத்து 33 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள்விடுவிக்கப்பட்டனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த அரசு பொது மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் 26 மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்:

இதற்கிடையே, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக புதன்கிழமையும் மாநிலத்தின் பல்வேறுேஊர்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தினர்.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 45 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மதுரைநீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+